பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22.

தமிழில்...வளர்ச்சியும்

லட்சுமியின் 'வில் வண்டி'
ஜீவாவின் 'வேதாந்த கேசரி'
டி. கே. சீனிவாசனின் 'துன்பக் கதை'
புஷ்பத்துறை சுப்ரமணியத்தின் 'ஜீவ சிலை'
கணையாழியின் 'நொண்டிக் குருவி'

கட்டுரையை முடிப்பதற்குள், பத்திரிகைகளில் அடிக்கடி சிறுகதை எழுதுவோரின் பெயர்கள் இன்னுஞ் சிலவற்றைக் குறிப்பிடுவேன் : கே. என். சுப்ரமணியன், ஜி. கெளசல்யா, இராதா மணாளன், தில்லைவில்லாளன். புஷ்பா மகாதேவன், வேங்கடலட்சுமி, புரசுபாலகிருஷ்ணன், ஜி. எஸ். பாலகிருஷ்ணன்.

சிறுகதை இலக்கியம் எனப்படுவது தமிழில் அண்மையான காலத்தில்தான் எழுந்தது; ஆயினும், இலக்கியக் கூறுகளில் அதற்குரிய நிலைபேறான இடத்தைப் பெற்று விட்டது என்றே சொல்ல வேண்டும். வாசகர்கள் பல்கப் பல்கச் சிறுகதைகள் மென்மேலும் வளரும்.