பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தமிழில்... வளர்ச்சியும்


காரணம் அவ்வாறு அவர்களைச் செய்யும்படி பாழான ஏழ்மையான நிலையில் விட்டுவிட்டசமுதாயமே என்பது காட்டப்படுகிறது.


    பழங்கதைகள் பல புது மெருகுப் பெற்றுச் சிறுகதைகளாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. கு. ப. ரா. எழுதிய "துரோகமா?" கருணாநதி எழுதிய 'ராயசம் வெங்கண்ணா' என்பதும் தஞ்சை நாயக்கிர்க்ளிடமிருந்து மராத்தியர் கைக்குப் போகும்படி ஏற்பட்ட சரித்திரக் குறிப்பின் அடிப்படையில் எழுந்தன. அவ்விரு ஆசிரியர்களும் நிகழ்ச்சியை வெவ்வேறு கோணத்திலிருந்து படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். புஷ்பத்துறை சுப்பிரமணியன் 'அஜாத சத்ருவைப் பாடலி' என்ற கதையில் திரும்பவும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார், 'கொனஷ்டை' எழுதிய அரைகுறைக் கதைகளில் மகனுக்கு முதுமையைக் கொடுத்து இளமையைத் தான் பெற்றுக்கொண்ட யயாதி ஒரே நாளில் பட்ட அல்லல்கள் ஆயிரம் ஆண்டுகளில் படுவதோடு ஒக்கும் என்ற அரிய கருத்துக் காட்டப்பட்டிருக்கிறது. "அகல்யை” என்ற புதுமைப்பித்தன் கதை புத்துருவமே பெற்று நிற்கிறது.
     சில கதைகள் எழுத்தாளருடைய வாழ்க்கையையும், வாழ்க்கை நிலையையும் காட்டுகின்றன. சுண்டுவின் 'சந்நியாசம்’ என்ற கதையில் ஒரு கதையாசிரியர் தன்னால் காதலிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பட முதலாளி தன் ஆசை நாயகியாக ஆக்கிக்கொண்டுவிட்டபடியால் எவ்வாறு படத்திலாவது சந்நியாசியாகிவிட்டார் என்பதைக் காட்டியிருக்கிறார்.
    ஒரு கதையாசிரியர் தமது பெருமையை தமிழ்நாட்டார் அறியவில்லையென வடநாட்டிற்குப் போய் அங்கிருந்து இந்தியில் 'வக்ரநாத்ஜி' என்னும் புனைப்பெயரில் கதைகள் எழுதினாராக, அப்புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டுப் பெருவாரியாக விற்பனை ஆயின என்பதை விந்தன் காட்டியுள்ளார்.