பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
111

கல்லூரியிலேயே பேராசிரியராகவும் பணியாற்றினார். படிக்கும் போதே விண்ணை ஆராய்ந்தார். பல உண்மைகளை அறிந்தார்.

தமது 18-வது வயதில் தன் தந்தை வாங்கிக் கொடுத்த 24 அடி தொலை நோக்கியைப் பயன்படுத்தி, அதுவரை வழக்கத்திலிருந்த ஜூபிடர், மற்றும் சனிக் கிரகங்கள் பற்றிய அட்டவணை தவறு என அறிந்தார். ஹேலியின் காலத்திற்கு முன் தென் வானம் சரியாக ஆராயப்பட்டு அட்டவணை படுத்தப்படவில்லை.

ஹேலிக்கு 1660-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராயல் சொஸைட்டியில் ஃபெலோஷிப் கிடைத் தது. உடனே அவர் ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பிரான்சு செல்லு முன்பு விண்ணில் ஒரு வால்மீனைக் கண்டார். அது லண்டனில் தெரிகிறதா எனக் கேட்டுத் தன் நண்பர் ஷாகுக்கிற்கு கடிதம் எழுதினார்.

அதை அறிந்த கொண்ட பின், அது முன்பு 1531லும், பிறகு 1607லும் தோன்றிய அதே வால் மீனாக இருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டார்.

தனது 19-வது வயதில் 1675-ல் கிரஹங் களின் சுற்றுப்பாதை பற்றி ஆராய்ச்சிசெய்து; அது பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். அது