பக்கம்:நான்மணிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

                           நான்மணிகள்


  ஒற்றுமை இல்லாமை வலிமையைக் கெடுக்கும்; தீய ஒழுக்கம் உடம்பைக் கெடுக்கும்; பொருந்தாப் பாண்டம் பாலைக் கெடுக்கம்; கூடா நட்பு குடியைக் கெடுக்கும். (21).


  என்றும் பொய்யாமை புகழை உண்டாக்கும்; இகழும் அறியாமை தீமையை உண்டாக்கும். சிறிதும் கல்லாமை பேதைமையை உண்டாக்கும்; சிறந்த அறிவு ஒளியைஉண்டாக்கும் 
                                      (22)
     பாகன் வருத்தினாலும் யானை சுமந்து செல்லும், தாய் அடித்தாலும் பிள்ளை தழுவ வரும்; தவறு செய் தாலும் நண்பர் பொறுப்பர்; நல்லது செய்தாலும் பகைவர் ஒட்டார்வ          (23)
      நகைநலம் நண்பர்களால் சிறப்படையும்; அவைநலம் அறிஞர்களால் சிறப்புப் பெறும்; தேர்நலம் பாகனாற் பெருமை பெறும்; ஊர்நலம் உள்ளோரால் மதிக்கப் பெறும் .                     (24)
         அஞ்ச வேண்டியவைகளை அஞ்சாது இருக்காதே? உதவி செய்வதில் ஒருபோதும் குறையாதே; நீதி வழங்கு வதில் ஒருபக்கம் சாயாதே. நேர்மையாளர் செயல்களில் ஐயப்பாடு கொள்ளாதே. 
                                      ( 25)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/16&oldid=1313011" இலிருந்து மீள்விக்கப்பட்டது