பக்கம்:நான்மணிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 நான்மணிகள்

மலர் இருப்பதை அதன் மணம் கூறும்; செயல் திறனை அவன் சொல் கூறும்; வஞ்சக எண்ணத்தை அவன் மனம் கூறும்; நெஞ்சகத்துள்ளதை அவன் முகம் கூறும். (46)

மக்களுக்கு மழையின்றி நலம் இல்லை; மழையானது நன்னெறியாளர் இல்லாது இல்லை; நன்னெறியும் அரசன்

இல்லாது இல்லை; அரசனும் குடிகள் இல்லாது இல்லை.

                                      (47)

மாலையின் அழகு மலர்களைப் பொறுத்தது; வண்டு களின் நலம் தேனைப் பொறுத்தது; தேனின் சிறப்பு பூக்களைப் பொறுத்தது; மக்களின் உயர்வு ஒழுக்கத்தைப் பொறுத்தது. . (48).

நண்பர்கள் பிழை செய்தாலும் அறிஞர்கள் வெறுப்ப தில்லை; நற்குடியினர் துன்பம் வந்தாலும் உறவினரை வெறுப்பதில்லை; சிறியோர்கள் செல்வம் பெற்றாலும் எவர்க்கும் வழங்குவதில்லை; பெரியோர்கள் வறுமை வந்தாலும் வழங்காது இருப்பதில்லை. (49)


நல்ல உணவும் பிணியுள்ள உடலுக்குக் கேடு செய்யும்; நல்ல சொற்களும் அறிவற்ற மக்களைத் துன்புறுத்தும்; நல்ல மக்களும் அறிவற்ற செயல்களால் வருந்துவர்; நல்ல அரசும் அளவற்ற சேனையால் பாழ்படும், (50),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/26&oldid=1313326" இலிருந்து மீள்விக்கப்பட்டது