பக்கம்:நான்மணிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 நான்மணிகள்

நினையாமல் இருக்க வேண்டும் பிறர் செய்த தீமைகளை; மறவாமல் இருக்க வேண்டும் அவர் செய்த நன்மைகளை; எப்போதும் விடவேண்டும் எளிதில் வரும்கோபத்தை அழித்து விடவேண்டும் ஆக்கம் சிதைப்பதை. (11)

பல்லினால் நோய் செய்யும் பாம்பு; கொம்பினால் நோய் செய்யும் காளை; ஊடலால் நோய் செய்வர் பெண்கள்; உள்ளத்தால் நோய் செய்வர் பெரியோர், (12)

பண்ணமையாத யாழைவிட பறையோசை நல்லது: ஆண்மையற்ற ஆணைவிட அடக்கமுடைய பெண் நல்லது: ஊசிப்போனதை உண்பதைவிடப் பசித்திருப்பது நல்லது: உரியவரைவிட்டு விலகி வாழ்வதைவிட உயிர் விடுதல் நல்லது. (13)

ஈகை விளைவது செல்வப் பயிரில்; மகிழ்ச்சி விளைவது இன்சொல் பாத்தியில்; துன்பம் விளைவது ஈரமில்லா நிலத்தில்: இரத்தல் விளைவது வறுமைச் செடியில். (14)

இழிவாக மதிக்கப்பட வேண்டுமானால் பிச்சை எடு; என்றும் நிலைத்திருக்க வேண்டுமானால், புகழை நடு; தன்னோடு செல்வது வேண்டுமானால், கொடை கொடு: எப்போதும் வெல்வது வேண்டுமானால் சினத்தை விடு. (15)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/12&oldid=1355033" இலிருந்து மீள்விக்கப்பட்டது