பக்கம்:நான்மணிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்மணிக்கடிகை

43

நான்மணிக்கடிகை 43

வன்கண் பெருகின் வலிபெருகும் பான்மொழியார் இன்கண் பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற மென்கண் பெருகின் அறம்பெருகும் வன்கட்

கயம்பெருகிற் பாவம் பெரிது.

(91)

இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம் வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம் கிளைஞரில் போழ்திற் சினம்.குற்றம் குற்றம்

தமரல்லார் கையகத் துண்.

(92)

எல்லா விடத்துங் கொலைதீது மக்களைக் கல்லா வளர விடல் தீது-நல்லார் நலந்தீது நாணற்று நிற்பிற் குலந்தீது

கொள்கை யழிந்தக் கடை.

(93)

ஆசார மென்பது கல்வி அறஞ்சேர்ந்த போகம் உடைமை பொருளாட்சி-யார்கண்ணுங் கண்ணோட்ட மின்மை முறைமை தெரிந்தாள்வான்

உண்ணோட்ட மின்மையு மில் -

(94)

கள்ளின் இடும்பை களியறியும் நீரிடும்பை புள்ளினுள் ஓங்கல் அறியும்-நிரப்பிடும்பை பல்பெண்டி ராளன் அறியும் கரப்பிடும்பை

கள்வன் அறிந்து விடும் .

(95)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/45&oldid=1389051" இலிருந்து மீள்விக்கப்பட்டது