பக்கம்:எனது நண்பர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  109

அவர்களும் அக்கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டராகப் பணிபுரிந்திருக்க வேண்டும். அதன்பிறகே, அவர் பெயரை , தொண்டை, சிலர் அறிய முடிந்தது.

இவர் பெயரைத்தமிழ்நாடு நன்கு தெரிந்துகொண்ட காலம், இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலமே ஆகும். அதற்கு. முன்பு இவருடைய பெயரையும், தொண்டையும், அக்கட்சியைச் சார்ந்த சிலரே அறிய வாய்ப்பிருந்தது.

காமராஜன் என்ற பெயர் மன்மதனுக்கு உரிய ஒன்று. இப்பெயரைத் தமிழ்நாட்டில் பலர் அப்போது வைத்திருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை. இப்போது, இப்பெயரைப் பலர் வைத்திருக்கிறார்கள். அப்போது அவருக்கு மட்டுமே இப்பெயர் இருந்தது என்ற முடிவுக்கு வருவதானால், தமிழ்நாட்டில் ஒரே காமராஜர்தான் என்ற முடிவுக்கு வர வேண்டியதுதான். மிகவும் அழகாக இருந்ததினால் இப்பெயரை அவருக்கு இட்டிருக்க வேண்டும் என நான் நினைத்ததுண்டு. ஆனால், நேரில் பார்த்தவர்கள் அப்படி ஒன்றும் இல்லை எனக் கூறினார்கள்.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, மிகக் குறைந்த படிப்பைப் படித்து, ஏழு எட்டு ரூபாய் சம்பளத்தில் இருந்து எளிய வாழ்க்கை நடத்தி, சிறந்த குணத்தைப் பெற்று, மிகுந்த உணர்ச்சியால் பொதுத் தொண்டிற் புகுந்தவர் காமாாஜர் என்று துணிந்து கடறலாம்.

உயர்ந்த பேச்சாளி என்றோ, சிறந்த எழுத்தாளி என்றே பெயர் பெறாவிட்டாலும், மிகுந்த உழைப்பாளி என்ற பெயரை அவர் வெகு விரைவில் பெற்றுவிட்டார். 1940இல் நான் நீதிக் கட்சியின், ஆந்திரம், கேரளம், கன்னடம், தமிழகம் ஆகிய நான்ரு மாநிலங்களுக்கும் பொதுக்காரியதரிசியாக இருந்த பெரும்பதவியை, பெரியாருக்கும் எனக்கும் ஏற்பட்ட மாறுபட்ட கருத்-