பக்கம்:எனது நண்பர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14  எனது நண்பர்கள்

இல்லத்தில் விருந்தளித்து, அனைவருக்கும் புத்தாடை கொடுத்து மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வைத்துத் தமிழ் ஆராயச் செய்து பெருமகிழ்ச்சி அடைந்தவர் அவர்.

கல்வி நிலையங்கள்

எவரிடத்தும் நன்கொடை பெறாமல் தன் வருவாயைக் கொண்டே கலைக்கல்லூரி, பொறியியற் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, சில உயர்நிலைப்பள்ளிகள், பல தொடக்கப் பள்ளிகள் முதலியவற்றைத் தொடங்கிப் பொதுமக்களுக்கு உதவிய பெருந்தகையாளர் கருமுத்து. சுருங்கக் கூறின் ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய பணிகளைத் தியாகராசர் தனி ஒருவராக செய்து முடித்திருக்கிறார் என்றே கூறவேண்டும்.

கலையழகு

கலைத்தந்தை அவர்கள் ஒரு கட்டடக் கலைஞர். கட்டடத்திலும் ஒரு கலையழகை, கலையழகிலும் ஒரு தனித் தன்மையைக் கண்டவர். சென்னை மதுரை, கொடைக்கானல், குற்றாலம் முதலிய இடங்களில் உள்ள அவரது மாளிகைகளில் அவரின் கைவண்ணத்தை, கலையழகின் தனித்தன்மையைக் கண்டு மகிழலாம்.

அரசியல்

1938–க்குப் பிறகு காங்கிரசில் இருந்து விலகினார். இந்தி எதிர்ப்புக் கட்சிக்குப் பிறகு எந்த அரசியல் கட்சியிலும் அவர் தலையிடவில்லை. நடு நிலைமை வகித்துத் தமிழ்ப்பணி மட்டும் புரிந்துவந்தார். என்றாலும் பல அரசியல் தலைவர்களுடன் நட்புக் கொண்டிருந்தார். அவர்களில் சர்.பி.டி. இராஜன், W.F.A. செளந்தர பாண்டியனார், பெரியார் ஈ.வே.ரா., விஞ்ஞானமேதை G.D.நாயுடு, சர் A. இராமசாமி முதலியார், A. T. பன்னீர் செல்வம், ராஜாஜி, 0.P.R, காமராஜ் முதலியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.