பக்கம்:எனது நண்பர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82  எனது நண்பர்கள்

திருந்தனர். சீட்டாடியது சூது அல்ல என்று அவனை விசாரிக்காமலேயே விரட்டி விட்டார். குடிகாரனை ஏதோ களைப்பினால் குடித்திருப்பான் என்று எண்ணி, இனி குடிக்காதே எனக்கண்டித்து விட்டு விட்டார். பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டால் உன் உயிர் போய்விடும் ஜாக்கிரதை என்று எச்சரித்து மன்னித்து அனுப்பிவிட்டார். வாழைத்தார் திருடியவனைத்தான் விசாரித்தார். அப்போது தம்பி ரெங்கசாமி அவன் திருடிய தாரையும் கொண்டுவந்து எதிரில் வைத்தார்.

“ஏன் இதைத் திருடினாய்?” என திருடியவனைக் கேட்டார். “எஜமான் நான் திருடியது தப்பு. பசியினாலே சாப்பிடத் திருடினேன். இனிமேல் திருடவில்லை” என்றான் அவன்.

“நீ இந்த ஒரு தார்தான் திருடினாயா? இதற்கு முன்னும் பல தார்களைத் திருடினாயா?” என பாண்டியர் கேட்டார்.

“இது ஒன்றுதான்” என்றான் அவன். “நீ எத்தனை தார் தூக்குவாய்?” என்றார். மூன்று தார் தூக்குவேன்’. என்றான். “எங்கே கிடங்கினுள் சென்று பெரிய தாராகப் பார்த்து ‘மூன்று தார்களைத் துக்கி வா, பார்க்கலாம்’ என்றார். அவனும் அவ்வாறே துக்கி வந்தான். நான்காவது தாராக திருடப்பட்ட தாரையும் தூக்கச் சொன்னார். திணறி முக்கித் தூக்கினான்.“போ, கொண்டு போய்ச் சாப்பிடு. இனித் திருடாதே” என்று பாண்டியர் கூறியது அனைவரையும் வியப்பிலாழ்த்தியது. அந்த நான்கு தார்களையும் அந்த ஆள் எடுத்துப் போகாமல் கீழே வைத்துவிட்டுக் கோவெனக் கதறி அழுது, “எஜமான், நான் ஜென்மத்துக்கும் திருடமாட்டேன்” என்று தரையில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். ‘போடா–போடா’ என்று விரட்டி விட்டார் அவனை. இவ்வாறாக விசாரணை தர்பார் முடிந்தது. அடுத்த நிமிடம் பண்ணையாள் ஒருவன் ஏதோ பேசினான். அவன் பேசியது ‘பொய்’ என்று தெரிந்ததும், பெரிதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/83&oldid=986331" இலிருந்து மீள்விக்கப்பட்டது