பக்கம்:எனது நண்பர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  69

தலைமை

இம் மூவரையும் தலைமை வகிப்பதற்கென்றே எல்லோரும் அழைப்பார்கள். அத்துடன் ஒரு சொற்பொழிவும் தனியாக இருக்கவேண்டும் என்று கேட்காத சங்கங்களோ சபைகளோ தமிழ் நாட்டில் இல்லை.

நிலை

பொருளும் வசதியும் பெற்றுப் பேசச்செல்லும் நிலையில் இருப்பவர் அடிகளார், வசதி மட்டும் பெற்று பேசச் செல்லும் உடல் நிலையில் இருப்பவர் பாரதியார். வசதி பெற்றாலும் பேசச் செல்ல இயலாத உடல் நிலையில் இருப்பவர் திரு.வி.க.

வம்பு

வம்புக்கு அஞ்சுபவர் அடிகளார். வம்புக்கு அஞ்சாதவர் பாரதியார். வம்புக்கே வராதவர் திரு.வி.க

கடவுள்

கடவுளைச் சிவமாகக் காண்பவர் அடிகளார். கடவுளை முருகனாகக் காண்பவர் திரு.வி.க. கடவுளை அருவமாகக் காண்பவர் பாரதியார்.

ஆரியர்

ஆரியரை ஆரியராகக் காண்பவர் பாரதியார். ஆரியரைத் தமிழராகக் காண்பவர் திரு.வி.க. ஆரியனாகவும் தமிழராகவும் இறைவனைக் காண்பவர் அடிகளார்.

வருந்துதல்

“சைவத்தைக் குறை கூறும் மக்கள் இன்னும் உயிரோடிருக்கிறார்களே” என்று வருந்தியவர் அடிகளார். “தமிழைக் குறை கூறும் மக்கள் இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/70&oldid=986128" இலிருந்து மீள்விக்கப்பட்டது