பக்கம்:எனது நண்பர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  125

9.4. “இந்தியை எதிர்த்து மறியல் செய்தவர்களுக்கு உடந்தையாயிருந்த குற்றவாளி அண்ணாத்துரைக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கிறேன்.”

—நீதிபதி.

மேலே உள்ள குற்றச்சாட்டுக்களால் அன்பர் அண்ணாத்துரை தாக்கப்பட்டவர் என்றாலும் அவர் குற்றவாளியா? அல்லவா? என்பதை விளக்கிக் கூறியதில்லை. நீதிமன்றத்திலேயே அவர் கூறவில்லையென்றால், நாட்டிலும் ஏட்டிலும் அவர் ஏன் கூறுகிறார். ஆகவே, அவர் குற்றவாளியா? அல்லவா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ள வேண்டியதுதான்.

நான் அவர்மீது சாட்டுகிற குற்றச்சாட்டு ஒன்றுண்டு. அது பொய் பேசுவது என்பதுதான். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தவிடத்துக்கு ஒரு அன்பர் வந்தார். “ஒன்பதாம் தேதி கூட்டம் : வரவேண்டும்” என்றார். ஒப்பினேன். அன்பர் அண்ணாத்துரையை அழைத்தார். அவரும் ஒப்பினார். அழைத்தவர் மகிழ்ச்சியோடு சென்று விட்டார். அவர் சென்ற பிறகு “ஒன்பதாம் தேதி வேறு வேலை இருப்பதாகச் சொன்னீர்களே. எப்படி ஒப்பினர்கள்’’ எனக் கேட்டேன். “நான் போகப்போவதில்லை. சும்மா சொன்னேன்” என்றார். “இந்த உண்மையை அவரிடம் சொல்லியிருக்கலாமே?” என்றேன். சொன்னால், அவர் நம்மை விட்டுப் போயிருக்க மாட்டார். நம்மையும் பேசவிட்டிருக்க மாட்டார்’ என்றார். “இதற்காகப் பொய் சொல்லுவதா?” என்றேன். உண்மையைச் சொன்னால் ஒப்புக் கொள்ளுகிற குணம் உண்டாகிற வரையில் பொய்பேசுவதில் தவறு ஒன்றுமில்லை” என்றார். “அந்தக் குணத்தை நாம்தான் உண்டாக்க வேண்டும். அதற்காகச் சிறிது தியாகமும் செய்யலாம்” என்றேன். “உங்களால் இயலலாம்; என்னால் இயலாது” என்றார்.