பக்கம்:எனது நண்பர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120  எனது நண்பர்கள்

களின் ஆக்க வேலைகளைப் பற்றியும், கொள்கைகளைப் பற்றியும், நாம் இருவரும் ஒரு கருத்துக்கொண்டவர்களே.

திராவிட நாட்டுப் பிரிவினை என்பது, தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்கு முரண் அல்ல என்பதை இப்போதே கூறிவிடுகிறேன். மற்றவைகள் தாங்கள் டில்லி சென்று திரும்பியதும்.

கட்சி வேலை சம்பந்தமாகத் தோழர் செளந்தர பாண்டியன் அவர்களிடமும் பேசியுள்ளேன். தங்களுக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன். மகாநாட்டிற்குத் தலைமை வகிக்குமாறு மறுபடியும் கேட்டுக் கொள்கிறேன். .

தங்களன்புள்ள தோழன்,
சி என் அண்ணாதுரை.

மாறுபட்டார் வேறுபட்டார் எனக் கருதும்போதும், அவருடைய அன்பையும், பெருந்தன்மையையும் கட்சியின் மீதுள்ள பற்றையும் கொள்கையின் மீதுள்ள உணர்ச்சியையும் எடுத்துக் காட்ட இக்கடிதம் போதுமானது என்றே கருதுகிறேன்.

விட்ட இடத்திலிருந்து

1942 மார்ச் 15ஆம் நாளில் சென்னை செயிண்ட் மேரிஸ் ஹாலில் சென்னை மாகாண ஜஸ்டிஸ் இளைஞர் மாநாடு பெரிய அளவில் என் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக் குழுத் தலைவர் அன்பர் அண்ணாத்துரை அவர்கள். இயக்கத்தின் வேலைகளைத்தொடர்ந்து நடத்த வேண்டும் எனத் தனது வரவேற்பு உரையில் குறிப்பிட்டார். இயக்கத்தின் வேலைகள் தடைப்பட்டு இரண்டு ஆண்டுகள் பாழாய்ப் போயினவே. இப்போது என் செய்வது? என எனது தலைமையுரையில் வருந்திக் கூறினேன். இதை அன்பர் அண்ணாத்துரை அவர்கள் மனதில் வைத்துக்கொண்டேயிருந்து, நன்றி கூறும்