பக்கம்:எனது நண்பர்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  145

இறுதியில் அவரது பொன்மேனி எரிக்கப்பட்டுப் போயிற்று.

என்று காண்போம்

கருமுத்துவை, கலைத்தந்தையை, தொழிலதிபரை, பெருஞ்செல்வரை, கொடைவள்ளலை, தமிழறிஞரை, ஏழை பங்காளரை, எளிய வாழ்வினரை, எளிய உடையினரை, இனிய சொல்லினரை, அவரது இன்முகத்தை, புன்சிரிப்பை, நாம் இனி என்றும் எங்கும் காணப்போவதில்லை. அவரது இழப்பு தமிழுக்கு, தமிழர்க்கு, தமிழகத்திற்கு பேரிழப்பாக முடிந்தது. யார்? யாருக்கு ஆறுதல் கூறுவது?

மெல்ல நகர்ந்து செல்லும் காலம்தான் நம் அனைவர்க்கும் நல்லாறுதல் கூறவேண்டும்.

வாழ்க கருமுத்துவின் புகழ்!

வளர்க அவர் செய்த பணிகள்!

எ.ந.–10