பக்கம்:எனது நண்பர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சர். ஏ. டி. பன்னீர்ச்செல்வம்

சர். ஏ. டி. பன்னிர்ச்செல்வம் அவர்கள் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவர். மற்றவர்கள் சர். பி. தியாகராயர், டாக்டர் நாயர், பனகல் அரசர், ஏ. பி. பாத்ரோ, சர் வெங்கடரெட்டி, சர். உஸ்மான் சாஹிப், பொப்பிலி அரசர், நெடும்பலம் சாமியப்ப முதலியார், சர். பி. டி. ராஜன், W. P. A. செளந்திர பாண்டிய நாடார் முதலானோர்.

நீதிக்கட்சி என்பதை ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் கட்சி என்றே கூறுவர். அது இன்றைய தி. மு. கழகத்திற்குப் பாட்டன் முறை. பெரியார் ஈ. வெ. ரா. அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் தந்தை முறை யாகும்.

அக்காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் பங்குபெற்று உழைத்த தலைவர்களில் பலர், தேசீயத்தின் பெயரால் பிராமணர்கள் தங்கள் நலத்திற்கு மட்டுமே காங்கிரஸைப் பயன்படுத்துகிறார்கள் என வெறுப்படைந்து வெளியேறிப் பார்ப்பனரல்லாதாரின் நன்மைக்கென்றே தோன்றிய கட்சி அக்கட்சி

ஏறத்தாழ 16 ஆண்டுகள் அக்கட்சி சென்னையில் அரசாங்கத்தை அமைத்து ஆட்சி புரிந்திருக்கிறது. அதில் பெரும் பங்கு பெற்றுத் தொண்டு புரிந்தவர், சர். ஏ. டி. பன்னிர்ச் செல்வம்.

அக்கட்சி செய்த நன்மைகளில், இந்துமத அற நிலையம் தோற்றுவித்தது; டாக்டர் பட்டத்திற்கு