பக்கம்:எனது நண்பர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124  எனது நண்பர்கள்

துரை திரும்பவும் பெரியாரோடு சேர்ந்த பொழுது, எங்களைக் கலந்திருக்க வேண்டும்.”

—இரு நண்பர்கள்.

2. “பாரதிதாசனுக்கு என்ன வந்தது? இரண்டு பாட்டுப் பாடிவிட்டால் ஒரு புலவர். அவனுக்கெல்லாம் பண முடிப்பு. இதற்கெல்லாம் அண்ணாத்துரை முயற்சி. எதுவும் கேட்டுச் செய்யவேண்டாமோ?

—தலைவர் பெரியார்.

3. சுவீகாரப் பிள்ளையாக நான் ஒருவன் இருக்கும் போது, இவனுக்கு என்ன இங்கு ஆதிக்கம்.

—தகப்பன் சாமி.

4. ‘ஒட்டிக் கொண்டிருந்தால் எட்டியிருந்து திட்டி எழுதுவேன். எட்டிப்போய் விட்டால் ஒட்டிக்,கொண்டு திட்டுவேன்.”

—மலைச் சாமி.

5. “கேட்டீர்களா செய்தியை. இப்பொழுது அண்ணாத் துரை இயக்கத்தைக் கவனிப்பதில்லை. நாடகம் எழுதிப் பணம் சம்பாதித்து, முதலாளி ஆகிவிட்டார்.

— கையாலாகாதவன்.

6. “கடிதம் எழுதினால் பதிலே எழுதுவதில்லை. என்ன இருந்தாலும் இப்படி இருக்கக் கூடாது.”

— எழுதிச் சலித்தவர்.

7. “பெரியார் கொள்கைக்கு விரோதமாகப் பெரிய தலையங்கம் ஒன்றை ஆகஸ்ட் 15–உ அநியாயமாக, எழுதலாமா?”

— திராவிட இளைஞர்கள்.

8. “தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டுற்கும் தொண்டு செய்யத் தமிழர் கழகம் அழைத்தும் அண்ணாத்துரை மறுத்துவிட்டது பெருங் குற்றமாகும்.”

— தமிழ் இளைஞர்கள்.