பக்கம்:எனது நண்பர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புரட்சிக் கவிஞர்

லகத்தில் மதங்கள் பல. அவற்றுள் மிகப்பெரிய மதங்கள் ஒன்பது. இவை இந்து மதம், புத்தமதம், சமணமதம், இஸ்லாம் மதம், பார்லி மதம், சைவம், வைணவம், சன்மார்க்கம் எனப்பெறும். இவை ஒன்பதும் நாம் வாழ்கின்ற இதே ஆசியாக் கண்டத்தில் தோன்றியவை. இதனால், இக் கண்டத்தை ‘ஞானம் பிறந்த கண்டம்’, “ஞானம் பிறந்த கண்டமென நல்லறிஞர்கள் கூறுவதுண்டு. பிற கண்டங்களில் ஞானம் விளையாமல் உப்பே விளைவதனால் அவை உப்புக் கண்டங்களாகப் போய் விட்டன. இத்தனை சமயங்களுக்கும் இலக்கியங்களைச் செய்து, உலக மொழிகளில் உயர்ந்து நிற்கும் ஒரே மொழி நம் தமிழ் மொழி. பிற மொழிகளில் எதுவும் இப்பெருமையைப் பெறவில்லை.

ஒரு மனிதனும், ஒரு நாடும் வெவ்வேறல்ல. இரண்டும் ஒன்றே. இரண்டையும் ஓவியங்களாக வரைந்து பார்க்கின் இவ்வுண்மை புலப்படும். முடி – காடு, பேன் – விலங்கு, நெற்றி – சமயம், மூளை–மெய்ஞ்ஞானம் - விஞ்ஞானம், மூக்கு – சுகாதாரம், கன்னங்கள்–கலைகள், காதுகள் – ஒற்றர்கள், வாய் – பத்திரிகைகள், பற்கள் – ஆலைகள், கழுத்து – பாதுகாப்பு, கைகள் – தொழில்கள், கால்கள் – போக்குவரத்து, முதுகெலும்பு – வணிகம், வயிறு – விவசாயம். இவற்றுள் நெஞ்சுதான் பண்பாடு.

ஒரு நாட்டின் உறுப்புகளும் ஒரு மனிதனின் உறுப்புகளும் புறக்கண்களால் காணக்கூடியவை. ஒரு நாட்டின் பண்பாடும், ஒரு மனிதனின் பண்பாடும் அகக் கண்களால் காணக் கூடியவை. இப்பண்பாட்டை விளக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/63&oldid=986324" இலிருந்து மீள்விக்கப்பட்டது