பக்கம்:எனது நண்பர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  103

விண்ணப்பம் போடுகிறவர்கள், சமஸ்கிருதம் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கொடுமையை அழித்து ஒழித்தது; எல்லா வகுப்பினருக்கும் ஆட்சியில் உரிமை கிடைக்க வேண்டும் என்ற வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை சட்டமாக்கியது; தீண்டாமை ஒழியவேண்டுமென்ற கொள்கையை முதல் முதல் தமிழகத்தில் புகுத்தியது; நகராட்சி, ஜில்லா போர்டு, தாலுகா போர்டு, சட்டசபை முதலிய இடங்களில் பல சமூகத்தினருக்கும் பதவி கொடுத்து மகிழ்ந்தது முதலியன குறிப்பிடத்தக்கவை.

சர்.ஏ.டி.பி. 1888–ல் பிறந்தவர்கள். எனக்கு 10 ஆண்டுகட்கு மூப்பு. 1912–ல் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று வந்து தமிழகத்தில் வழக்கறிஞர் தொழிலை நடத்தியவர். இருமுறை நகராட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றுப் பணிபுரிந்தவர். இப்போது தஞ்சையில் காணப்படுகின்ற மிகப் பெரிய கட்டிடமாகிய ‘பனகால் பில்டிங்’ என்பது அவர் 1925–ல் ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோது கட்டப் பெற்றது. அவரது தொண்டினைப் பாராட்டி ஆங்கிலேய அரசு சர் பட்டத்தையும், கட்சி ஹோம் மெம்பர் பதவியையும் அளித்துப் பாராட்டியது.

நீதிக்கட்சி சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த போது, சர்.ஏ.டி.பியும் சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தார். அது குறித்து அவர் சிறிதும் கவலைப் படாமல் திருவாரூரை அடுத்துள்ள பெரும்பண்ணையூர் சென்று விவசாயப்பணி புரிந்து வந்தார். இப்போது அந்த ஊருக்கு செல்வம் நகர் என்று பெயர்.

ஒரு சமயம் பெரியார்மீது காங்கிரஸ் ஆட்சியில் வகுப்புத் துவேஷத் குற்றம் சாட்டிக் கைது செய்து கோவை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்குக் கொண்டு சென்றனர். அப்போது நான் பெரும்