பக்கம்:எனது நண்பர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104  எனது நண்பர்கள்

பண்ணையூர் சென்று சர்.ஏ.டி. பன்னிர்ச்செல்வம் அவர்களிடம் இதை எடுத்துச் சொல்ல, அவர் தானே பெரியார் சார்பில் எதிர்வழக்காட கோவை வந்திருந்தார். நாங்கள் எல்லோருமே திரு.ஜி.டி. நாயுடு வீட்டில் தங்கியிருந்தோம். அப்போது கோவை செக்ஷன்ஸ் நீதிபதியாக வேலை பார்த்தவர் ஐஸ்டிஸ் “லோபோ” என்பவர். நீதி விசாரணையன்று காலையில் நாங்களனைவரும் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தபோது, நீதிபதி லோபாவின் காரியதரிசி ஒருவர் வந்து சர்.ஏ.டி.பி. இன்று கோர்ட்டுக்கு வரவேண்டாம் என்று ஐஸ்டிஸ் லோபோ கேட்டுக் கொண்டதாகக் கூறினார். எனக்கு இது வியப்பை அளித்தது. ஏ. டி.பி.யிடம் காரணம் கேட்டேன். “நான் ஹோம் மெம்பராயிருந்தபோதுதான், லோபோவிற்கு இந்த வேலையைக் கொடுத்தேன்; அதனால் நான் இன்று கோர்ட்டிற்குச் சென்று ‘யுவர் ஆனர்’ என்று அவரைக் குறிப்பிடுவதைக் கேட்க வெட்கப்படுகிறார் போலும்” என்று என்னிடம் கூறிவிட்டு, வந்த ஆளிடம் நான் இதற்காகவே வந்திருக்கிறேன். நான் கோர்ட்டுக்கு வராமலிருக்க முடியாது நீதிபதியிடம் சொல்லுங்கள்; என் கடமையை நான் செய்கிறேன். அவர் கடமையை அவர் தாராளமாகச் செய்யலாம்” என்று சொல்லி அனுப்பினார்.

இறுதியாக என்ன நடந்தது? நாங்கள் அனைவரும் கோர்ட்டுக்குச் சென்றிருந்தோம். பெரியாரையும் அங்கு கைதியாகக் கொண்டு வந்திருந்தார்கள். மணி அடித்ததும் ஜட்ஜ் லோபோ விடுமுறை எடுத்துக் கொண்டு சென்று விட்டார், கோர்ட்டுக்கு வரமாட்டாரென்று செய்திதான் கிடைத்தது.

மற்றொரு முறை, அதாவது 1938–ல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் போது பெரியாரைக் கைது செய்து அவர்மீது குற்றத்தைச் சாட்டித் தண்டித்து, பல்லாரிச் சிறையில் அடைக்க