பக்கம்:ஓ மனிதா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

ஓ, மனிதா!

சைக்கிள் ஸ்கூட்டராகி, ஸ்கூட்டர் கார் ஆகி என்ன பயன்?—அப்போது காலை வலித்தது; இப்போது இதயத்தை வலிக்கிறது!

ஏன் இந்தத் துன்பம்? இந்தத் துன்பத்துக்கெல்லாம் யார் காரணம்?

ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுக்காத அதிபரா?

இன்னும் கொஞ்சம் கூடுதலாக விளையாத விளைநிலமா?

இமய மலையின் உச்சியை எட்டிப் பிடிக்காத மச்சு வீடா?

ஏரோப்பிளேன் ஆகாத காரா?

இல்லை; இவற்றில் எதுவுமே உன் துன்பத்துக்குக் காரணமில்லை.

பின் யார் காரணம்? எது காரணம்?

எல்லாவற்றுக்கும் காரணம் நீயும், நீ கண்ட சொத்துரிமையுமே.

சுதந்திரம் உன்னுடைய ‘பிறப்புரிமை’யாயிருக்கலாம், ஆனால் சொத்துரிமை உன்னுடைய பிறப்புரிமை அல்ல; அது இயற்கையின் பிறப்புரிமை. அந்த உரிமையை நீ இயற்கையினிடமிருந்து அபகரித்தாலும் அபகரித்தாய், அதன் பலனை இப்போது நன்றாக அனுபவிக்கிறாய்!

சொத்துரிமைக்கு முன்னால் உன்னை ஆள உனக்கு மன்னன் தேவைப்படவில்லை; மந்திரிப் பிரதானிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/65&oldid=1370857" இலிருந்து மீள்விக்கப்பட்டது