பக்கம்:ஓ மனிதா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17. காகம் கேட்கிறது

கொஞ்ச நாட்களாக உங்களை இந்த ‘சோஷலிஸ பைத்தியம்’ பிடித்து ஆட்டி வைக்கிறது. எங்களையும் நீங்கள் ‘சோஷலிஸ்டுகள்’ என்று சொல்லிராது கிடைத்தாலும் அதை நாங்கள் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவ‘தாகப் போற்றி வருகிறீர்கள்.

இது எந்த அளவுக்கு உண்மையென்றால், நீங்கள் ‘சோஷலிஸம் பேசும்’ அளவுக்குத்தான் உண்மை !

அதாவது, கீழே ஏதாவது இருந்து, அதைக் கொத்திக் கொண்டு மேலே போக முடியாமலிருந்தால், நாயோ பூனையோ வந்து விரட்டி விட்டுத் தின்றுவிடக் கூடாதே என்பதற்காகக் ‘கா, கா, கா’ என்று கரைந்து நாங்கள் பக்க பலத்துக்காக மேலும் கொஞ்சம் கூட்டம் சேர்ப்போம். உங்களுக்கு முன்னால் அதைக் ‘கலந்துண்டு’, எங்களை சோஷலிஸ்ட்டுகளாகவும், காட்டிக்கொள்வோம். கிடைத்ததை எடுத்துக் கொண்டு மேலே போக முடிந்தாலோ?—அதைக் கொண்டு போய் ஒரு மரக்கிளையின்மேல் வைத்து, அது தவறிக் கீழே விழுந்துவிடாதபடி அதன்மேல் ஒரு காலை ஊன்றிக்கொண்டு, சக காக்கைகள் பகிர்ந்துண்ண அவற்றைச் சிறகால் அடித்து விரட்டிக் கொண்டு, அதை நாங்களே, நாங்கள் மட்டுமே எங்கள் அலகால் பிய்த்துப் பிய்த்துத் தின்று தீர்ப்போம்.

இந்த விஷயத்தில் உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள ஓர் அபூர்வ ஒற்றுமை என்ன–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/124&oldid=1371376" இலிருந்து மீள்விக்கப்பட்டது