பக்கம்:ஓ மனிதா.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16. யானை கேட்கிறது

சும்மா சொல்லக் கூடாது; பல விஷயங்களில் நீ வினாவுக்குரிய மனிதனாக இருந்தாலும், சில விஷயங்களில் வியப்புக்குரிய மனிதனாகவும் இருக்கிறாய்!

அவற்றில் ஒன்று இது;

எவ்வளவு பெரிய ஜீவன் நான்; எவ்வளவு சிறிய மனிதன் நீ. என்னை நீ எப்படியோ பிடித்து அடக்கி ஆண்டுவிடுகிறாயே!

முதலில் நீ காடையை வைத்துக் காடையைப் பிடிக்கக் கற்றாய்; அடுத்தாற்போல் கவுதாரியைப் பிடிக்கக் கற்றாய். இப்படியே நீ மானை வைத்து மானையும், யானையை வைத்து யானையையும் பிடிக்கக் கற்றுக் கொண்டு விட்டாய்!

இந்தப் புத்திசாலித்தனம் உனக்கு எப்படி வந்திருக்கும்?—சந்தேகமென்ன, என்னை வைத்துத்தான் இந்தப் புத்திசாலித்தனம் உனக்கு வந்திருக்கும்!

உன்மேல் உனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. அதாவது, உன் மனத்தை உன்னாலேயே அடக்கி ஆண்டுவிட முடியும் என்ற நம்பிக்கை உனக்கு எந்த நாளிலுமே வந்ததில்லை.

ஆகவே, அந்த நாளிலேயே உன்னை அடக்கி ஆள நீ உன் கூட்டத்துக்குத் ‘தலைவன்’ என்று ஒருவனைக் கண்டாய். அந்தத் தலைவன் பின்னால் ‘ராஜா'வானான்; அந்த ராஜா பின்னல் ‘ஜனாதிபதியாகி’ அந்த ஜனாதிபதி இப்போது பிரதமமந்திரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/118&oldid=1371349" இலிருந்து மீள்விக்கப்பட்டது