பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



46

’கொடுத்தமுதற் கெட்டுணேயுங்
கூடவட்டி வாங்கலுண்ணல்
கடுத்தஹரும் ஆகும்அது
காண்மின்’ எனப் பூணும்நெறி
தொடுத்தமறை சொற்றமொழி
சூழ்ந்துரைத்துத் தாய்மைபட
அடுத்துவந்து காத்தவுங்கள்
அன்புடைமை வம்பேயோ

ஆலநபி நாயகமே

அன்புடைமை வம்பேயோ?

47

முடியாட்சி என்றுமுழு
மோசநிலைக் காளாக்கும்
தடியாட்சி நீத்தொறுத்து
சர்வசன நாயகமாம்
குடியாட்சிக் கேற்றவழி
கோலிமுதன் மாதிரியாப்
படியாட்சி செய்தவுங்கள்
பாரமதி என்னேயோ

பான்மைநபி நாயகமே
பாரமதி என்னேயோ!

48

அத்தனருள் வேதமொழிக்
கத்தாட்சி உம்மையல்லால்
சித்தமுறத் தேர்வதற்கும்
செப்புதற்கும் இல்லையென
இத்தரையில் ஒத்தமொழி
ஈந்தெவரும் ஏத்தெடுப்பச்
சுத்தமுறு நும்மாட்சி
சொல்லுதற்கு மேலாதே

சோமநபி நாயகமே
சொல்லுதற்கு மேலாதே!

17#