பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாவலரின் பாட்டு மழைத்துளிகள் தங்கள் பொக்கிஷாலயங்களில் சிக்கிக் கொண்ட காரணத்தாலேயே தங்களை முத்துச்சிப்பிகள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு கிடக்கும் வயிறுமட்டுமே உடம்பாய்க் கொண்ட கிளிஞ்சல்கள் நடுவில் ஜனாப் கே.சி.எம். ஒரு சாதகப்புள்.

அந்தத் துளிகளுக்காவே. அவற்றை மகிமைப்படுத்தவே. தனது சிறகுகளைப் பிரார்த்தனைக் கரங்களாக விரித்துக் காத்திருக்கும் சாதகப்புள்.

◯ ◯


நிலமிருந்தும் உரமிருந்தும் பருவம் துணையிருந்தும் விதைகளுக்கு ஏற்பட்ட செயற்கையான பஞ்சம் காரணமாக மலட்டுச் சாயல் பெற்றுவிட்ட இஸ்லாமியத் தமிழிலக்கியப் பண்ணையில் நெருக்கடி நிலை! பதுக்கப்பட்டு விட்ட விதைகளைத் தேடிப்பிடித்துச் சொல்லேருழவருக்கு இலவசமாய்ப் பகிர்ந்தளிப்பதே தமது தற்போதைய ஒரே அம்சத் திட்டம் என்று சூளுரைத்துப் புறப்பட்டு விட்ட ஜனாப் கே.சி.எம். அவர்கள் மதுரை மாவட்டம் தந்த சீதக்காதி

◯ ◯

xviii