பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வ. கோ. சண்முகம்


‘சனாதன சிசுருஷை’ செய்து;
தெம்பூட்ட முயலும்
எனது

சந்தர்ப்ப தோஷ
வைதீக உத்திகள் கூட
உன்வருகையால்
ஒடுங்கி ஓடி விடுகின்றனவே!
இது ஆச்சரியம் அல்லவா!
வசந்தங்களின் வர்ணங்களில்-
உனக்கு உற்வசம் நடக்கிறது:
அந்த உற்சவத்தில்
மனப்பூச்சோடு
ஊர்ந்து வந்து,
உவந்து வந்தே
என இதயத்தின்
அகல நீளத்தில்
எத்தனை எத்தனை
செளந்தர்யத் தொட்டில் கட்டி
ஆட்டுகிறாய்!

நீ-
பொதிகைப் பூங்காற்றாக
என் ஆயாச வியர்வைத் துளிகளைத்
துடைக்கும்
விநாடித் துளிகளில் எல்லாம்
நான் நிஜமாகவே வாழ்கிறேனே,
அது என்னடி அதிசயம்!