பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

45


சலசல அருவியில் சங்கீதம் இல்லை!
தொலைவு மலையும் சோம்பித் துயிலுதே!
சாயும் சூரியன் முகில்களுக் கெல்லாம்
சாயச் சிவப்பைத் தடவி வைக்குது!
அழகும் துயரமும் ஆக கலந்து

செறியும் கோடை
நாடகம் இதுவே!

இனிய பழைய நினைவுகள் கோடி!
கனியும் புதிய காதலும் சிரிக்குது!
வைகாசிப் புன்னகை ஆனிப் பிணைப்புகள்;
தொய்விலும் எழுச்சி! துயிலிலும் விழிப்பு!
தாண்டித் தாண்டிப் போகும் கால

ஆண்டுகள் தந்திடும்
வாழ்வுப் பரிசுகள்!!