பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வ. கோ. சண்முகம்


முகச்சவர சுகத்திற்கும் ஒருநாளே ஆயுள்!
முறைகேடாம் மதுவுணர்டால் மூன்றுமணி 'சுகமே'
அகம்தழுவி உறவாடும் அழகிளமை மங்கை
அளிக்கின்ற மோகசுகம் அறுபதுநா ளெண்பார்!
பகல்கசந்தால் இரவுவந்து பால்நிலவு தெளிக்கும்
பான்மைக்கும் பனிரண்டே மணிப்பொழுது! ஆனால்
தகவிழந்த முதிர்ந்தபெரும் கலைஞர்கள் இனினும்
'சக்கரத்தை உருட்டுவது' விந்தையிலும் விந்தை!

தேமாவின் கனிசுட தினம்தினமும் தின்றால்
திகட்டுவதும் கசப்பதுவும் பொதுவான இயல்பே - வீணே
'சாமானியர், பொதுமக்கள் விரும்புகிறார்’ என்ற
சாக்கொன்றை மிகையாக்கிக் சிலகலைஞர் நிழலில்
நாமாவளி பாடுவதே கலைவளர்ச்சி என்றால்
நகைப்பவரே ஏராளம்! ஏராளம்!! - இந்த
'மாமாங்கக் கலைஞர்’ களால் கலைத்துறையே இன்று
வனப்பிழந்து கிழடுதட்டி வாடிவிழ லாச்சே!