பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மல்லுடைய வெஞ்சமரில் வக்தெதிர்ந்த வஞ்சகர்தம்
கல்லுடைய கைக்கவணுல் காய்ந்தெறிந்து வாய்ந்த முகப்
பல்லுடையக் கோறல்செய்த பான்மைகண்டும் தீமையிலாச்
சொல்லுடைய நற்கருணை தோய்ந்துகின்ற தாய்ந்தேமோ

சுத்தகபி காயகமே தோய்ந்துகின்ற தாய்ந்தேமோ!

'பல்லுப் போனால் சொல்லுப் போகும்’ என்பதல்லவா வழக்குமொழி! இங்கோ பல் போகுலும் தீமையிலாச் சொல் வருகிறதாம். நயமான சொல்லாட்சி.

தாங்கள் வணங்கும் விக்ரகங்களை நிக்ரகம் செய்யும் பெருமானாரின் பிரச்சார வேகம் கண்டு கலக்கமும் கொதிப்பும் கொண்ட குறைஷியர்கள் பெருமானாரைப் பேணிவந்த பெரிய தந்தையார் அபூதாலிபிடம் சென்று முறையிடுகிறிர்கள். அவர் பெருமானாரிடம் சென்று தெரிவிக்கிறார். அப்பொழுது நபிகள் நாதர் கூறிய புகழ்மிக்க சொற்களைப் பாட்டாக்குகிறார் பாவலர்:

செங்கதிரும் வெண்மதியும் சேர இரு கைத்தலத்தில்
தங்கவைத்துப் பைம்பொன்நிதி தந்திறைமை ஈந்தாலும்
துங்கமிகு சாந்திநலம் தோய்ந்தபரி சுத்தநெறி
எங்கணிலை என்றுரைத்த திப்புவியும் ஒப்பாதோ

ஏந்தல்‌ நபி நாயகமே இப்புவியும் ஒப்பாதோ!

எங்கள் நிலை சாந்தி நலம் என்பதனால் பலதெய்வச் சில வணக்கம் பூசல் விளைவிக்கும் பொல்லா நெறி என்பதும்,

பரிசுத்த நெறி என்பதனால் விக்ரக வணக்கம் ஆன்மாவையே அழுக்காக்கும் இழுக்கு நெறி என்பதும்,

எங்கள் நிலை என்பதனால் நாம் இதில் நிலைத்து நிற்பவர்கள், மாறமாட்டோம் என்பதும்,vi