பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-பாவலனுக்குப் பிறகு இஸ்லாமிய சமுதாயம் தமிழுலகிற்குத் தலை நிமிர்ந்தளித்த தகுதிவாய்ந்த கவிஞன்; பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு தனக்குப் பின்னே ஒர் இலக்கிய அணிவகுப்பை உருவாக்கிய வரலாறு பெற்ற கவிஞன்


அவன் உணர்வுகளோடு அத்துவிதமாகி உரித்துப் பரிமாறியுள்ளது, நாவல் பழச்சாறு - நல்லதோர் எழுதுமை ஆனதுபோலப் பார்த்தாலே இனிக்கவல்லது.

◯ ◯

இந்நூலுள் இடம் பெற்றுள்ள ஒரு நூற்றிரண்டு ஓரோவடி மிக்குவந்த வெண்டாழிசைக் கொச்சகக் கலிப்பாக்களுள் தொன்னூற்றாறு பாடல்கள் சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘முஸ்லிம் நாளேட்டின் வெள்ளி மலர்களில் சுமார் 36 ஆண்டுகட்குமுன்னர் தொடர்ந்து பிரசுரமாயுள்ளன. இதுதவிர செய்குதம்பிப் பாவலர் அவர்கள் கையொப்பமிட்டு ஜனாப் கே.சி.எம். அவர்கள் மாமனர் ஜனாப் என்.கே.எஸ்.முகமதுராவுத்தர் கண்ணிய சமூகத்திற்கு 26.7.1940 -அன்று எழுதிய கடிதத்துடன் இணைத்தனுப்பியிருந்த பாடல்களையும், தமிழ்நாட்டில் ஆங்காங்குப் படியெடுத்து வைக்கப்பட்டுள்ள கையெழுத்துப் பிரதிகளையும் ஒத்தும் உறழ்ந்தும் நோக்கிப் பாடல்களைப் பதிப்பித்துள்ளோம்.

ix