பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டவுடன் பல்லிளித்துக் கைவிரித்துக் கண்சிமிட்டிக் கொண்டயரி காசமுறை கூர்ந்தியற்றும் கோளினர்க்கும் மண்டலத்தில் அச்செயலே மாற்றமற எப்பொழுதும் அண்டஅறிந்து உட்கசிந்த அற்புதமும் கட்பேயோ

அண்ணல் நபி நாயகமே அற்புதமும் நட்பேயோ!

சாபம் பவித்து அவன்நோய் பெருகியதைவிட வளிப்பு இயல்பானது.கண்டு அப்புல்லனுக்காகவும் உட்கசிந்த இரக்கடில்லவ அற்புதம்’ என்கிறார் பாவலர். கருணை நபிக்கேற்ற காரியமும் அதுதானே! பாவலரின் பார்வையைப் பாராட்டாமலிருக்க முடியுமா?

ஒவ்வொரு பாடல் முடிவிலும் பயின்று வருகிற ஓகாரத்தில் அல்லது ஏகாரத்தில் பாவலரது உருக்கம், அன்பினால் ஈரமான உள்ளம் இவை தொனிக்கின்றன.

பாடல்களில் உள்ள நிகழ்ச்சிகள் வரலாற்று வரிசையில் இல்லை; முன்பின்னாகக் கிடக்கின்றன. அதுமட்டுமல்ல; சில பாடல்களே முன்னரே அந்நிகழ்ச்சிகளே அறிந்தோர் தவிரப் பிறர் புரிந்து கொள்வது அரிது. பேருமாளுரின் வாழ்வையும் வாக்கையும் பிறருக்கு விளக்குவதற்காகப் பாவலர் இந்நூலைப் பாடவில்லை என்பதுதான் இதன் காரணம். பெருமானாரின் வாழ்விலும் வாக்கிலும் ஒன்றிப்போய் ஈடுபட்டிருந்த பாவலரின் மனம் எதை நினைந்து உருகுகிறதே? அதனை


xii