பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உண்டியின்றிப் பட்டினியால் உற்றலவோர் மாதுயரம்,
பண்டிவிம்ம வாரியுண்ணும் வன்கணர்’

அண்டியறியவே நோன்பு என்றும் எல்லோரும் சமவுடைமை எய்தவே ஸக்காத் என்றும் இப்பார்வையிலேயே காட்டுவார் பாவலர். அதுவும் ஸக்காத் பற்றிப் பாடுகையில்:

இன்மை உண்மை செல்நிலைக்கு எய்தாமல் எல்லோரும்
நன்மைபெறு ஓர் சமமாம் ஞாயமிகு ஏழைவரி
வன்மையுடன் ஈந்துரிமை வாய்ந்த பொருளாதாரத்
தன்மைகொளச் செய்தவுங்கள் தத்துவமும் கத்தேமோ

சாந்திகபி நாயகமே தத்துவமும் கத்தேமோ!

என்னும் வார்த்தை ஒவ்வொன்றும் அட்சர லட்சம்' என்பார்களே அந்த மரியாதைக் குரியது. இன்மை உண்மை என்பது மனிதர்களுக்கு ஏற்படுவதில்லை. செல்வநிலைக்குத்தான் என்கிறார், எல்லோரும் நன்மைபெற வேண்டுமென்றில் ஓர் சமமாவதுதான் வழி என்கிறார்.

இப்படி ஒர்சமமாவதுதான் ஞாயம் என்பதனால் ஏற்றத் தாழ்வுகள் அநியாயம் என்கிறார். இந்த ஏற்றத்தாழ்வுகளே நீக்கத் தன் திறமை உழைப்பால் தேடிவைத்திருப்பவனின் பொருள் முழுவதையும் பறிப்பதோ, அதுவும் வன்முறையால் வெளவுவதோ ஞாயமாகாது என்பது தோன்ற ஸக்காத்தை ஞாயமிகு ஏழைவரி என்கிறார், ‘ஞாயமிகு” என்ற சொற்றொடர் ஒருபுறம்'ஓர் சமமாம் ஞாயத்தை மிகுவிக்கின்ற ஏழைவரி என்றும் இன்னுமொருபுறம் "ஒர்சமமாக்கும் ஞாயமிக்க ஏழைவரி என்றும் பொருள்பட்டு நிற்கும் நயத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.

X