பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




70

வைதவன்பால் தீர்ந்தனன்யான்
வஞ்சமென மண்டைஉடைத்
தெய்ததந்தைக் கின்னலிதில்
இல்லையின்பம் என்ருெறுத்துப்
பொய்தலிலாச் சன்மார்க்கம்
பூணவழி காட்டிஅருள்
செய்தவுங்கள் மாராயம்
செப்பவல்லார் யாரேயோ

செம்மல் நபி நாயகமே
செப்பவல்லார் யாரேயோ!

71

மக்கம்விட்டு நள்ளிருளில்
வாய்ந்தபைத் துல்முகத்திஸ்க்(கு)
ஒக்கநடத் தாட்டிய அவ்
வுத்தமன்றன் உண்மையெலாம்
தொக்க அறிவிக்கவகை
சூழ்ந்துணர்ந்து மீண்டெழுந்து
புக்கவுங்கள் மாமகிமை
பூதலமும் ஒதாதோ

போதநபி நாயகமே
பூதல்மும் ஒதாதோ:

72

வெட்டமுனைந் தோன்தரையில்
மீண்டுமிட வாளேஅவற்
கிட்டமுடன் நல்கி இனி
ஏற்றஇஸ்லாம் பாரஸிக
வட்டமுற்று மேவுமுதல்
மன்னவனுய்ப் போந்தங்கே
பட்டமுற்று வாழ்தி எனப்
பன்னியது முன்னேமோ

பாரநபி நாயகமே
பன்னியது முன்னமோ!