பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


55

சென்றவழி நாப்பண்உமைச்
சேரவிடுத் தேவருவல்
என்றகன்ற நண்பர்நினை
வின்றி அவண் மற்றையநாள்
ஒன்றவந்து நோக்கிநிற்றல்
ஒர்ந்துரைபோ துட்டுணுக்கிக்
கன்ற அஞ்சல்” என்றண்ட
கண்ணியமு மெண்ணேமோ

கத்தநபி நாயகமே
கண்ணியமு மெண்ணேமோ?

56

மக்களிடை தாழ்வுயர்வு
வன்மைமென்மை தீண்டாமை
மிக்ககுல பேதமுதல்
வேற்றுமையெ லாமொறுத்துத்
தக்கசம தத்துவமாம்
தண்ணிழற்கீழ் ஆக்கியென்றும்
தொக்க அருள் கூர்ந்துவந்த
துய்யநிலை பொய்யேயோ

சோதிநபி நாயகமே
துய்யநிலை பொய்யேயோ!

57

வாய்மையல தில்லை உயிர்
வாழ்க்கைநலம் அத்தனையும்
தூய்மையுடன் நல்கவல்ல
தோமிறவம்' என்றெவர்க்கும்
ஆய்மையுடன் ஒதிஅதற்
கத்தாட்சி யாப்போந்து
சேய்மைதரு மூவுலகும்
சீர்த்துநின்ற தேத்தேமோ

தெய்வநபி நாயகமே
சீர்த்துநின்ற தேத்தேமோ!




★ நோமில் தவம் தோம்-குற்றம்


20