பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

தோழர்அபூ பக்கருமைத் ‘தூயஇசு லாம்தழுவி வாழநினைந் தோர்புதுமை மெளன்றருள வேண்டு‘மெனச் 'சூழவந்த வல்லிருளில் தோய்ந்தறிந்த தும்கனவின் ஆழமறிந் துய்யு‘மென்ற அற்புதமும் கற்பேயோ அரியநபி நாயகமே அற்புதமும் கற்பேயோ!

86

உற்றமகள் இட்டநகைக் குள்ளுடைந்து வாடி'இது குற்றம்நபி மாமகளின் கொள்கையல தாயினும்கை அற்றவருக் கீந்துதவல் அன்பின்நிலை‘ என்றஉணர் பற்றவைத்துக் காத்ததிந்தப் பாருலகுந் தேராதோ பகரும்நபி நாயகமே பாருலகுந் தேராதோ!

87

கோதுமைஓர் கால்படிக்கே குப்பாய மொன்றீடாப் போதுநல்கி நாட்கழித்த போதுமந்தப் பொய்ப்பொருளின் மீது நசை வையாமல் மேலவன்தன் மெய்யருட்கே மோதுநசை வைத்ததிந்த மூவுலகுங் காவாதோ! முன்னேநபி நாயகமே மூவுலகுங் காவாதோ!