பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

மார்டின் லூதர்


டில், அந்த ரகத்தைச் சேர்ந்தவனல்ல லூதர். தன்னுடைய சொந்த நடையில், சொற்களின் தராதரம் மியமறிந்து இடம், பொருள், ஏவல் என்பதை யுணர்ந்து கருத்துக்களைக் கோர்வையாக்கி, எதிரி களையும் தன்பால் இழுக்கும் நாவன்மை படைத்தவன் லூதர்.

அறியாமை

சீட்டுகளை வாங்காதீர்கள். அதை நீவீர் வாங்கினால் , உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதாகும். உங்கள் பகுத்தறிவை நீங்களே செய்ய, பாவிகள் விற்கும் பாவ மன்னிப்பு சீட்டைத் துணைக்கழைக்கின்றீர்கள் என்றுதான் பொருள்.

குற்றம் செய்யாத மனிதனே உலகில் இல்லை. காரணம், குற்றம் இன்னதென்று தெரியாத காரணத்தால், இன்னதென்று தெரிந்தும், செய்து தீரவேண்டிய சூழ்கிலையால், தனக்கு வேண்டாமென்றாலும் தன்னை நம்பியவர்கள், தன்னால் போஷிக்கப்பட வேண்டியவர்களை வாழவைக்க வேண்டிய கட்டாயத்தால் மனிதன் குற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், அதற்காக பச்சாதாபப்படாமல், இனி என்னால் குற்றம் செய்யாமல் வாழ முடியும் என்று திட நம்பிக்கை கொள்ளாமல், எப்படி பாப மன்னிப்புச் சிட்டின் மூலம் பாபங்களை ஒழிக்க முடியும். வெறும் பொய், பித்தலாட்டம், நம்பாதீர்கள், உங்கள் பாவங்களெல்லாம் உலர்ந்த சருகென்றும், அந்த பாவ-