பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

33



பார்லிமெண்டு

ட்டடத்தினுள்ளே சாளரங்களுக்குக் கட்டியிருந்த பட்டுத் திரைகள் காற்றால் படபடவென்று அடிக்கும் சத்தத்தை தவிர, அவரவர்கள் உட்காரத் தங்கள் தங்கள் நாற்காலிகளை இழுக்கும்போது, கீச் கீச் என்ற சத்தந்தவிர மற்ற எந்தச் சத்தமும் கேட்கவில்லை. போப்பின் முகத்தில் பிரேதக்களை படிந்துவிட்டது. அரசன் கண்கள் அக்கினி கோளங்களாய் விட்டன. மந்திரிப் பிரதானியர் மண்ணால் செய்த பொம்மைபோல் வீற்றிருக்கின்றனர். வாயில்காப்போன் வாயசைக்கவில்லை. நடன மாதர்களுக்கும் நாடக அரங்குக்கும் விடுமுறை. கத்தோலிக்க மார்க்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் நாள். மதகுருவின் மானத்தை வாங்கும் நாள். மார்டின் லூதரின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நாள். போப்பாண்டவர் ஜெயித்துவிட்டால், இந்தப் பொல்லாதவனைத் தூக்கிலிடலாம். ஆனால் இவனை ஜெயித்துவிட்டால் போப்பாண்டவரை என்ன செய்வது, என்று நீதிக்கும் நட்புக்குமிடையே மன்னன் மனம் ஊசலாடிக் கொண்டிருக்கும் நாள். ஒரு கையில் வாள், மற்றோர் கையில் கேடயம் தாங்கிய வீரர்கள் மாளிகையின் மேல்தளத்தைக் தாங்கும் தூண்கள்போல ஆடாமல் அசையாமல் நிற்கின்றனர். சரவிளக்கு ஆடும் சத்தம் மட்டிலும் சில நேரம் சலசலவென்று கேட்கின்றது. ஒரே மெளனம். இந்த நிலையில் மனதையே நம்பி வரும் மார்டின் லூதர் நடந்து

3