பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

மார்ட்டின் லூதர்


களை அழித்தெழுதியது, சர்வாதிகார ஆட்சியை முறியடித்து ஜனநாயகத்தை மலரச் செய்தது இந்தக் கண்ணீர்தான் என்று தெரிந்து கொள்ள முடியாத அப்பாவிகளின் அறியாமைக்காக இரங்கி ஏளனச் சிரிப்போடு ரோமாபுரியை விட்டு வெளியேறினான்.

கேலி

போப்பின் உத்திரவு பெற்ற பிறகே, எதையும் செய்து பழகிவிட்ட மக்கள், தனி ஒருவனால் என்ன செய்ய முடியும் என்று யாரும் துணிந்து கூற வேண்டிய காலந்தான் அது. தேய்ந்த பாட்டையிலேயே போய் பழகிவிட்ட மாடுகள் புதுப்பாதையில் போவதென்பது கடினமான வேலைதான் என்று எல்லோரும் ஏகமனதாகத் தீர்ப்பளித்துத் தீர வேண்டிய நேரந்தான் அது.

எனினும், ஓர் புதுப்பாதையில் மாடுகளை ஓட்ட முடியும் என்ற புதியதோர் நம்பிக்கை பிறந்தது மார்டின் லூதர் ஒருவனுக்குத்தான்.

ஏற்கெனவே தேய்ந்துவிட்ட பாதை முதன் முதலில் எப்படி இருந்திருக்கும். தேயாமல் இருந்திருக்கும். பிறகு வண்டிகளை ஓட்டி ஓட்டி எப்படி அந்தப் பாதையை தேய வைத்தார்களோ-அதே போலத்தான் நாம் அமைக்கப் போகும் புதிய பாதையும் முதலில் இருக்கும். பிறகு வரிசையாக வண்டிகளை அதன்மேல் ஓட்ட ஓட்ட நிச்சயம் நமது புதிய பாதையும் பழமையாய்விடும், பயமில்லை