பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

மார்டின் லூதர்


தின் மூடக்கொள்கைகளைத் தாக்கி "ஜேபியின் கத்தி" (Pocket Dagger) என்ற ஒரு நூல் எழுதியிருந்தான். ஆனால் அதைத் தொடர்ந்து பல நூல்கள் வெளியிட முடியாமல் அரசனையும் போப்பையும் கண்டு எராஸ்மஸ் பயந்துவிட்டான்.

இந்த நிலையை லூதர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு முதன் முதலில் மக்களிடம் தைரியமாக இவன்தான் கூறினான், பேசினான், எழுதினான்.

புண்ணியக்கடை பாவச்சீட்டு

தே நேரத்தில்தான் போப்பின் கையாள் ஜான் டெட்சால் (John Tetzal) என்பவன், போப்பின் கையெழுத்திட்ட பாப மன்னிப்புச் சீட்டுகளோடு ஜர்மனிக்குள்ளே நுழைந்தான். "கொலை, களவு, காமம், பொய் எது செய்திருந்தாலும் சரி இந்தச் சீட்டை வாங்கினால் மன்னிக்கப்படுவார்கள். கற்பழிதல், கற்பழித்தல், ஒழுக்கங்கெடல், கர்ப்பச் சிதைவு, சட்டவிரோதக் குழந்தைகளை உயிரோடு புதைத்தல், வழிப்பறிக் கொள்ளை எது செய்திருந்தாலும் சரி இந்தச் சீட்டின் மூலம் மன்னிக்கப்படுவார்கள். மனச்சாட்சி ஒன்று இருப்பதாகவே நினைக்காமல் யார் யார் எந்தெந்த பாவத்தை எங்கெங்கே எதற்காகச் செய்தாலும் இந்த பாப மன்னிப்புச் சீட்டின் மூலம் மன்னிக்கப்படுவார்கள்" என்றே விலை கூறி வந்தான் டெட்சால். பலர் வாங்கினார்கள். சிலர் வெறுத்தனர். ஆனால் லூதரின் அருமை நண்பனான சாக்ஸன் நாட்டுச் சிமான்,