பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

எல்லீசர்


மலையாளம் முதலிய இத்தேச மொழிகளில் தேர்ந்து, தமிழ் இலக்கண இலக்கியத்தை ஒருங்குணர்ந்து, சென்னையில் கல்விச் சங்கம் நாட்டுதறகு வேண்டும் முயற்சி செய்தமைத்து, அப்பல்கலைச் சங்த்தைப் பாண்டியனைப் போலும் பாதுகாத்தார். எல்லிசு துரை என்பது அவர் அளித்த பாராட்டுரை.

அக் கல்விச் சங்கத்தின் மானேசராக இருந்த முத்துசாமிப் பிள்ளை என்பவர் சிறந்த தமிழ் அறிஞராகவும் விளங்கினார். ஏசு மதத்தின் சார்பாகத் தத்துவ போதகர், வீரமாமுனிவர், சாங்கோ பாங்கர் முதலிய துறவோர் எழுதிய நூல்களை அவர் நன்கு கற்று, அவற்றில் அமைந்த கருத்து நுட்பங்களையும் கட்டுரை நயங்களையும் யாவரும் கேட்டு வியக்கும்வண்ணம் சொற்பொழிவு செய்து வந்தார். புதுச்சேரி அன்பர் ஒருவரால் சுருக்கமாக எழுதப்பட்டிருந்த குறிப்புகளை ஆதரவாகக் கொண்டு, முதன் முதல் வீரமாமுனிவரது சரித்திரத்தை விளக்கமாக எழுதி வெளியிட்டவர் அவரே. அப்பணியில் அவரை உய்த்து ஊக்குவித்தவர் எல்லீசர். வீரமாமுனிவர் தொண்டு செய்த இடந் தொறும் சென்று அவர் இயற்றிய நூல்களைச் சேகரிக்கும் பணியை எல்லீசர் அவரிடம் ஒப்புவித்து, அதற்கு வேண்டிய பொருளும் தாராளமாக உதவினார். இங்ஙணம் முத்துசாமிப் பிள்ளை சேகரித்த நூல்களுள் சிறந்தது தேம்பாவணிக் காவியம்.

வீரமாமுனிவர் தாமே எழுதிய தேம்பாவணிக் கையெழுத்துச் சுவடி ஆவூர் என்ற சிற்றூரில்