பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9. அகராதி ஆசிரியர்


முற்காலத்தில் சமண முனிவர்கள் தமிழ் இலக்கியங்களை அறிதற்குக் கருவியாயுள்ள நிகண்டு நூல்கள் இயற்றியவாறே பிற்காலத்தில் கிருஸ்தவத் தொண்டர்கள் அகராதி நூல்கள் தொகுத்து உதவினர். 'அகரம் முதல எழுத் தெல்லாம்' என்று திருவள்ளுவர் கூறிய முறையில் தமிழ் மொழியில் வழங்கும் சொற்களை அகரம் முதலாக வரிசைப் படுத்திப் பொருள் விளக்கும் நூலே அகராதி எனப்படும். இத்தகைய அகராதியை முதன் முதல் தமிழுலகத்திற்கு அளித்தவர் வீரமா முனிவரேயாவர். அவர் தொகுத்த அகராதி நான்கு பகுப்புடையதாய் விளங்கிற்று; ஆதலால் சதுர் அகராதி என்று பெயர் பெற்றது[1]

சதுர் அகராதி அளவிற் சிறிது ; ஆயினும் அருமை வாய்ந்தது. வீரமா முனிவரது அகராதி நெறியைக் கடைப்பிடித்து, . நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பாப்ரீசியர் என்பார் விரிவான அகராதி யொன்று வெளியிட்டார்[2] அவர் ஜெர்மானிய லூதரன் மடத்தைச் சேர்ந்தவர். அவர் தொகுத்த அகராதியில் இலக்கியச் சொற்கள் மட்டுமேயன்றிப் பேச்சு வழக்கிலுள்ள


  1. பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு வகுப்புகள் அவ்வகராதியில் உள்ளன.
  2. இது கி.பி. 1779ம் ஆண்டில் சென்னை வேப்பேரியில் பதிப்பிக்கப்பட்டது.