பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேதநாயகம் பிள்ளை

55


"ஏனென்று கேட்பவர் இல்லாத் தமிழை இனிதளிக்க
நானென்று கங்கணம் கட்டிக் கொண்டாய் இந்த நானிலத்தே“

என்று அப்பெரியாரைப் பாராட்டினார்.

பஞ்சக் காலத்தில் அத்தேசிக மூர்த்தி பசித்தோர் முகம் பார்த்துப் பரிவுடன் உணவளித்தார். இவ்வாறு வருந்தி வந்தவர் அரும்பசி தீர்த்து 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே' என்னும் வாசகத்தை மெய்ப்பித்த பெரியாரை வேதநாயகர் மனமாரப் போற்றினார்[1].

கிருஸ்தவ மதத்தில் வேதநாயகர் சிறந்த பற்றுடையவராயினும் தெய்வத்தின் பெயரால் சமயவாதிகள் சண்டையிட்டுக் கொள்ளுதல் தவறு என்பது அவர் கொள்கை. பாரத நாட்டிலுள்ள பல சமயவாதிகளும் சமரச உணர்ச்சியோடு பணி செய்தல் வேண்டும் என்பது அவர் ஆசை. இக் கருத்துக் கொண்டு அவர் பாடிய கீர்த்தனங்கள் பலவாகும்; அவற்றைத் தொகுத்துச் 'சர்வசமய சமரச கீர்த்தனம்' என்னும் பெயரால் வெளியிட்டார்.

பிறசமயத்தாருடன் வேதநாயகர் வேற்றுமையின்றிப் பழகினர். சைவ சமயத்தைப் போற்றி


  1. நேரொன்று மில்சுப் பிரமணி யாதிப நின்னைப்பல்லோர்
    காரென்று சொல்வர் அக் காரும் வஞ்சித்த இக் காலத்திலே
    ஊரென்றும் வாழ அறுசுவை யுண்டி உதவி உன்தன்
    பேரென்றும் நிற்கச் செய்தாய் உனக் காரெனல் பேதைமையே

    என்பது அவர் பாட்டு.