பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



16

போப்பையர்


டார். இது இன்னா செய்தார்க்கு நன்னயம் செய்தல் அன்றோ ?

இங்ஙனம் சிறந்த ஒற்றுமைகளைக் கண்ட போப்பையர் மனத்தில் ஒரு கருத்துத் தோன்றிற்று. திருமயிலாப்பூரில் வாழ்ந்த திருவள்ளுவர், அர்ச்தாமஸ் முதலிய கிருஸ்தவ சீலர்கள் அங்குச் செய்த போதனையை அறிந்து இவ்வுண்மைகளை வெளியிட்டிருக்கலாம் என்னும் பொருள்பட எழுதியுள்ளார். [1]இது அறிஞர் ஆராய்தற்குரியதாகும்.

இன்னும் போப்பையர் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் என்னும் அருள் நூலையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழ்நாட்டில் திருவாசகத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.


  1. “Pope speaks of the Kural as the one Oriental book much of whose teachings is an echo of the Sermon on the Mount.........Many Christians have a tendency to think that the ideas of forgiving one's enemies, abstaining from returning evil for evil, humility etc. have been first taught to the world only by Jesus Christ. But it can be safely asserted that these ideas were the common property of great minds at least for centuries before Jesus was born, and Tiruvalluvar had enough in the sacred literature of India, to say nothing of his illumined Self to enable him to build these truths is his grand scheme of life without being in any way indebted to the teachings of Jesus, though he would certainly have studied with love and humility the teachings of the great Risihi had he known of his existence "-Preface to V. V. S. Iyer's Tirukurai,