பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கார்டுவெல் ஐயர்


பூம்புகார் நகரம் என்றும் பண்டை இலக்கியங்கள் அதனைப் பாராட்டுகின்றன. அத்துறைமுகத்தின் வழியாகத் தமிழ் நாட்டு அரிசி மேல் நாடுகளுக்குச் சென்றது. கிரிக்கு மொழியில் அரிசியை அருஸா எனச் சிதைத்து வழங்கலாயினர் ; அதனடியாகவே ஆங்கிலத்தில் வழங்கும் ரைஸ் என்னும் சொல் பிறந்தது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து கண்டவர் கால்டுவெல் ஐயரே.

இன்னும் தோகை என்னும் சொல், தமிழிலும் மற்றைய திராவிட மொழிகளிலும் மயிலின் இறகைக் குறிப்பதாகும். மயிலிறகு தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட காலத்தில் தோகை என்ற சொல்லும் அதனுடன் பிற நாடுகளுக்குச் சென்றது. ஈபுரு மொழியிலுள்ள கிருஸ்தவ வேதமாகிய பைபிளிற் காணப்படும் துகி என்னும் சொல் தோகையின் சிதைவேயாகும் என்று விளக்கிக் காட்டினார் கால்டுவெல் ஐயர்.

தமிழ் நாட்டுக் கோழியைப்பற்றி அவர் செய்துள்ள ஆராய்ச்சியும் அறியத்தக்கதாகும். மத்திய ஆசியாவில் வழங்கும் சித்திய மொழிகளில் கோழியைக் கோரி என்ற சொல்லாற் குறிக்கின்றார்கள். கோரி என்பது கோழி என்ற தமிழ்ச் சொல்லின் சிதைவே என்று கால்டுவெல் ஐயர் காட்டியுள்ளார். தமிழில் சிறப்பெழுத்தாக வழங்கும் ழகரம் பிறநாட்டார் நாவில் எளிதாக நுழைவதில்லை. சோழ மண்டலக் கரையைக் கோர மண்டலக் கரையாகச் சிதைத்தனர் மேலே நாட்டார். தமிழகத்தைத் தமரிக்கா என்று குறித்தார் பழைய யவன ஆசிரியர் ஒருவர். இவ்