பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிவுரை

87


தமிழ்நாட்டாரது பழமையான நாகரிகத்தை உலகமெல்லாம் அறியும் வகை செய்தல் வேண்டும் என்று ஆசைப்பட்டார் பல கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர். அந்த வகையில் கால்டுவெல் ஐயர் ஆற்றிய தொண்டு என்றும் தமிழ் நாட்டாருக்கு ஊக்கம் அளிப்பதாகும். தமிழகத்தில் மறைந்து கிடக்கும் மாநகரங்களையும், தூர்ந்து கிடக்கும் துறைமுகங்களையும், அவர் துருவிப் பார்க்க முற்பட்டார். சங்க காலத்திலும், இடைக் காலத்திலும் பெருமையுற்று விளங்கிய கொற்கைத் துறையையும், காயல் துறையையும் அவர் அகழ்ந்து பார்த்து அறிந்த உண்மைகளை ஆர்வத்தோடு வெளியிட்டார். கொற்கைத் துறை போன்ற பழந்துறைகள் தமிழ் நாட்டில் இன்னும் பல உண்டு. காவிரியாறு கடலிற் பாயுமிடத்தில் சோழ நாட்டுப் பெருந்துறைமுகப் பட்டினம் முற்காலத்தில் இருந்தது, அதனைக் காவிரிப்பூம் பட்டினம் என்றும், பூம்புகார் நகரம் - என்றும், பண்டைப் புலவர் பாராட்டினார்கள். சங்க நூல்களில் அதன் பெருமை விரிவாகக் கூறப்படுகின்றது. இன்னும் சேர நாட்டில் பெரியாறு கடலிற் கலக்குமிடத்தில் முசிறி யென்னும் துறைமுக நகரம். அமைந்திருந்தது. எனவே, பழங்காலத்தில் பாண்டி நாட்டுத் துறைமுகம் கொற்கை ; சோழ நாட்டுத் துறைமுகம் காவிரிப்பூம் பட்டினம்; சேர நாட்டுத் துறைமுகம் முசிறி என்பது தமிழ் இலக்கியத்தால் நன்கு புலனாகின்றது[1]. இத் துறைமுகப் பட்டினங்களெல்-


  1. கொச்சி நாட்டிலுள்ள கிராங்கனூர் என்னும் கொடுங்கோளூரே பண்டை முசிறி என்பர்.