பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

கார்டுவெல் ஐயர்


மொழிகளுக்குப் புத்துயிர் அளித்தவர் கால்டுவெல் ஐயரே. அம்மொழிகளின் பழமையையும் பண்புகளையும் மேலைநாட்டார்க்குச் செப்பமாகக் காட்டியவர் கால்டுவெல் ஐயரே. ஆதலால் திராவிட மொழிகள் உள்ளளவும் அவர் இயற்றிய ஒப்பிலக்கணம், குன்றில் இட்ட விளக்குப்போல் நின்று. நிலவும் என்பது திண்ணம். கால்டுவெல் ஐயர் வாழ்ந்த இடையன்குடி இக்காலத்தில் எல்லா வன்கயிலும் ஏற்றமுற்று முன்னணியில் நிற்கின்றது. அங்குள்ள பெரிய கிருஸ்தவக் கோயில் கால்டுவெல் ஐயரின் சிறந்த ஞாபகச் சின்னமாக விளங்குகின்றது. அத்திருப் பணியைச் செய்து முடித்தவர் அவரே. கோயில் கட்டுமான வேலை அரை குறையா யிருக்கும் பொழுது சென்னைக் கவர்னர் லார்டு நேப்பியர் இடையன்குடிக்கு விஜயம் செய்தார் ; பரிவாரங்களோடு ஒரு வாரம் அங்குத் தங்கி ஐயரோடு அளவளாவி மகிழ்ந்தார்; ஐந்நூறு ரூபாய் திருப்பணிக்கு நன்கொடையாக அளித்தார்.

கால்டுவெல் ஐயர் தமிழ் நாட்டில் வாழ்ந்த ஐம்பத்துமூன்று ஆண்டுகளில் மூன்று முறை ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றார். மூன்றாம் முறை சென்றபொழுது அங்கேயே தங்கி விடும்படி அன்பர் பலர் அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்குக் கால்டுவெல் இணங்கவில்லை. "இத்தனை காலமும் இந்தியர்களுக்காகவே வாழ்ந்தேன்; இன்னும் உயிர் உள்ள அளவும் அவர்களுக்காகவே உழைப்பேன் ; அவர்கள் நாட்டிலேயே உயிர் துறப்பேன்“ என்று உருக்க