பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக விஞ்ஞானிகள் 85. வசதியற்ற எளிய குடும்பத்தில் பிறந்து வறுமை இன்ன தென்பதை உணர்ந்து வாழ்ந்து வந்ததால், ஐன்ஸ்டின் நலிந்த உடலோடு, சோம்பிய முகத்தோடு எப்போதும் நண்பர்கள் கூட்டத்தில் சேராமல் ஒதுங்கியே இருந்து வந்தார். இளமை முதற்கொண்டே ஏட்டுப்படிப்பில் அக்கறை யில்லாத அச்சிறுவன், புதுமையை ஏதாவது காண்பதில் மனத்தைச் செலுத்தி, எப்போதும் கற்பனே வானிலேயே பறந்துகொண்டிருந்தான். அதுதான் அவன் பொழுது போக்கு. பள்ளிப் பாடங்களில் கருத்து செலுத்த இயலாத அப்பையனுக்குக் கணிதம் என்ருல் உயிர். அதுவும் அல்ஜீப்ரா கணக்கு அவனுடைய மனதை அதிகமாகக் கவர்ந்தது. ஒரு முறை இரண்டாண்டுகளுக்குப் பாடமாக வைக்கப்பட்ட ஜியாமெட்ரி கணக்குகளே அவன் சில: மணி நேரங்களில் தெளிவாகப் புரிந்துகொண்டு, பிறருக்கு, அதைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டான். இந்நிகழ்ச்சி, அப்பள்ளி ஆசிரியர்களே மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது. ஐன்ஸ்டின் உயர்தரப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம், அவருடைய தகப்பனருக்குத் தொழில் சரியாக நடைபெருமல் மியூனிச்சை விட்டு மிலான் நகரம் சென்றுர், செல்லும்போது ஐன்ஸ்டீனைத் தன்னோடு அழைத்துப் போகாமல், மியூனிச்சிலேயே பள்ளிப் படிப்புை முடிக்குமாறு கூறிவிட்டுச் சென்ருர், . . " உயர்தரப் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றியடைந்த வர்களே பல்கலைக் கழகத்தில் படிக்கவோ, வேறு வேலைக்குப் போகவோ முடியும். ஆனல் ஐன்ஸ்டினுக்கு படிப்பில் ஆர்வ மில்&ல. காரணம், கணிதத்தைத் தவிர மற்ற எல்லா பாடங் களிலும் அவர் மிகவும் பின்தங்கிய நிலயில் இருந்தது, அவருக்கே படிப்பில் சலிப்பை உண்டுபண்ணியது. எப்படி யாவது உயர்தரப் பள்ளியைவிட்டு நீங்க முடிவு செய்து மருத்துவரிடம் சென்று, இதாலி நாட்டின் சீதோஷ்ணம் தான் ஐன்ஸ்டீனுக்கு ஒத்துக்கொள்ளும், இங்கிருந்தால்