பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 நீராவி நிபுணர்கள் 'நிலவைப் பார்க்க முடியும்; அணுக முடியாது:இப்படிச்சொல்லப்பட்ட நிலையில்(Armstrong) ஆர்ம்ஸ்ட்ராங்க் என்பவன் முதல் காலடி வைப்பதற்கு முன்னல், அது எவ்வளவு தொலைவில் இருக்கிறது, அதன் இயக்கம் என்ன, சூரியனுக்கும் அதற்கும் எவ்வளவு துாரம், அது கல்லா, மண்ணு, கட்டாந்தரையா, புல் பூண்டுகள் உண்டா, உலோகங்கள் ஏதாவது கிடைக்குமா, அதற்குத் தேய்பிறை என்றும் வளர்பிறை என்றும் வருவானேன், திங்களுக்கு ஒரு முறை கண்ணுக்குப் புலப்படாமலிருப்பதற்கு என்ன காரணம், அங்கே உயிர் வாழ்வன ஏதாவது உண்டா என்பதையெல்லாம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துச் சொன்ன துண்டு. ஆனல் ஒருசாரார்,அதாவது மதவாதிகள், சந்திரன் ஒரு கடவுள், அவருக்கு இருபத்தேழு மனேவிகள் உண்டு, அதை பாம்பு ஒன்று விழுங்கும்போது நிலவு நமது கண் களுக்குத் தெரிவதில்லை, பாம்பு விழுங்கும்போது கிரகணம் என்றும், அதை பாம்பு தன் வாயிலிருந்து கக்கியவுடன் தொல்லை விட்டது என்று கடலிலும், ஆறுகளிலும், குளம் குட்டைகளிலும் குளிக்கவேண்டும் என்றனர். இதைவிட வேடிக்கை, இராமர் கணையாழியை இலங்கை நூவரேலியா