பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T4 型、 குடிமகள் தான் விரும்பும் பாடத்தைப் படிக்க உரிமையில்இல் என்ற வேதனையோடு, தனக்குப் பிரஞ்சு மொழி தெரிந் திருந்ததால் பாரிஸ் நகரத்திற்குப் போள்ை. அங்கிருந்த பல பல்கலைக் கழகங்களிலே, சர்போனி பல்கலைக்கழகம் ஒன்றுதான் பெண்கள் சேர்ந்து படிக்கும் பல்கலைக்கழகமாக இருந்தது. அதில் பெண்கள் சேர்ந்து விஞ்ஞானத்தைப் படிக்கலாம் என்று தன் தலைவாயிலைத் திறந்துவிட்டிருந்தது. ஆனால் அதே நேரத்தில் இங்கிலாந் தில் எத்த&னயோ பல்கலைக்கழகங்கள் இருந்தும், அவற்றில் பெண்கள் மருத்துவத்துறைப் படிப்புப் படிக்கக் கூடாது என்ற விதியிருந்ததால் அங்கிருந்து பல பெண்கள் பாரிஸ் நகரத்திற்கு வந்து படித்துக் கொண்டிருந்தார்கள். 1888 ல் கியூரி கன்னிப்பருவம் அடைந்தவுடன், இந்த விஞ்ஞான சொற்பொழிவுகளைக் கேட்டும், ஆராய்ச்சிகளை நடத்திக் கொண்டும் இருந்தபோது மிகச் சிறப்பெய்திய விஞ்ஞான சொற்பொழிவாளரான பியார்க்கியூரி என்பவரை சந்தித்துக் காதலித்து, 1895 ல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். தான் இரண்டு பெண்களுக்குத் தாயான பிறகு கூட,தன் கணவர், குழந்தைகளோடு விளையாடுவதும், தான் சமையல் வேலையைக் கவனிப்பதுமாக அவர்கள் வாழ்க்கை இன்பமாகவே கழிந்து வந்தது. அந்த நேரம் விஞ்ஞானத்தைப் பற்றியெல்லாம் தெரியாதவர்கள் விஞ் ஞானிகள் எல்லாம் எதையோ கண்டுபிடிக்க மண்டையைப் போட்டு உருட்டிக் கொண்டிருக்கிருர்கள்’ என்று பேசிக் கேலி செய்து கொண்டிருந்தார்கள். ஆனல் கியூரிக்கு திருமணமான 1895th eabsòr@ Roontgen ரோண்டஜன் என்பவர் ஒரு அதிசயமான ஒளி அஆலயைக் கண்டுபிடித்து, அதற்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல், ஆங்கில முறைப்படி ஒன்றும் தெரியாததற்கு X என்று குறித்து, பக்கத்தில் Rays என்பதைச் சேர்த்து x-Rays என்றழைத்தார்.