பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பெர்டினன்ட் டிலேஸ்ஸெப்ஸ் சூயஸ் கால்வாய் : இரண்டு கண்டங்களையும், இரண்டு கடல்களையும் சேர்த்து வைத்த பெருமை பிரெஞ்சு நாட்டின் Qurgħuurori (36òsiv66rdligro (Ferdinaud De Lesseps) என்பவரை சாரும். அந்த வாய்க்கால் வெட்டியதன் மூலம் செங்கடலும், மத்திய தரைக் கடலும் இணைந்தது. லண்டனி லிருந்து பம்பாய்க்கு வரும் கப்பல்களின் தூரத்தை ஐயாயிரம் மைல் குறைத்துவிட்டது. - பெர்டினண்டின் வாழ்க்கை பத்தொன்பதாவது நூற்றண் டில் சூயஸ் கால்வாய் வெட்டியதன் மூலம் மிகப் புகழும், பனமா வாய்க்கால் வெட்டியதன் மூலம் இகழ்ச்சியும் ஏற்பட்டு விட்டது என்று சொல்லலாம். பனமா வாய்க்கால் வெட்டிய தன் விளைவாக அவருக்கு ஏற்பட்ட கெட்டப் பெயர், பனமா வாய்க்காலுக்காக செலவழித்த பணத்தில் மூன்றில் ஒரு பங்கு வீண் விரயமும், மூன்றில் ஒரு பங்கு மோசடியும் போக, மூன்றில் ஒரு பங்குதான் உண்மையாகச் செலவாயிற்று. அந்தப் பழி இவர் மேல் விழுந்து விசாரணைக்கும், தண்டனைக்கும் உள்ளானர் என்பதுதான் வரலாறு. 1805 நவம்பர் மாதம் 19-ம் நாள் வார்சேல்சில் பிறந்தார்.