உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ༤༨ཤུ> 45

(2) குடந்தை (கீழ்க் கோட்டம்), (3) ஐயாறு, (4) ஆரூர், (5) திருத்துருத்தி (குற்றாலம், தஞ்சை மாவட்டம்), (6) திருக்கோடிகா, (7) பாண்டவாய்த் தென் இடைவாய் (பாண்டவாய் என்ற ஆற்றின் தென் கரையிலுள்ள இடைவாய்), (8) திரு நெடுங்களம், (9) குழித்தண்டலை (குளித்தலை), (10) ஆனைக்கா, (11) மயிலாப்பூர், (12) உஞ்சேனை மாகாளம்,% (13) வளைகுளம், (14) சாய்க்காடு (15) திருப்பாச்சிலாச் சிராமம், (16) சிராமலை, (17) மழபாடி, (18) ஆப்பாடி, (19) ஏகம்பம் (காஞ்சி), (20) திருப்பனந்தாள், (21) ஒற்றியூர், (22) திருக்கடவூர் மயானம்.

இக்கால நாயன்மார்

சிம்மவிஷ்ணு மகனான மகேந்திரன் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர். அப்பருடன் வாழ்ந்தவர் சம்பந்தர். இந்த இருவராலும் அவர்கள் திருப்பதிகங்களிற் பாடப் பட்டவர் பலர். அப்பர் தம் தேவாரப் பதிகங்களில் (1) அப்பூதி அடிகள், (2) சண்டீசர், (3) கோச்செங்கணான், (4) சாக்கிய நாயனார், (5) கண்ணப்பர், (6) கணம்புல்லர், (7) சம்பந்தர், (8) அமர் நீதியார், (9) நமிநந்தி, (10) அரிவாள் தாயர் என்ற பதின்மரைப் பாராட்டியுள்ளார்."

சம்பந்தர் தம் பதிகங்களில் (1) சண்டீசர், (2) கண்ணப்பர், (3) நமிநந்தி, (4) கோச்செங்கணான், (5) தண்டியடிகள், (6) புகழ்த்துணை, (7) முருகர், (8) சிறுத் தொண்டர், (9) நீல நக்கர், (10) மங்கையர்க்கரசி யார், (11) குலச்சிறையார், (12) திருநீலகண்ட யாழ்ப்பாணர், (13) நெடுமாறர் என்ற 13 பேரைப் பாராட்டியுள்ளார்."அப்பர்-சம்பந்தர் தேவாரம் கொண்டும், பெரியபுராணம் கொண்டும் காணின், அப்பர்-சம்பந்தர் காலத்து அடியார் இவராவர். (1) அப்பர், (2) சம்பந்தர், (3) அப்பூதி, (4) முருகர், (5) சிறுத்தொண்டர், (6) நீலநக்கர், (7) குலச்சிறை, (8) மங்கையர்க்கரசியார், (9) நெடுமாறர், (10) குங்கிலியக்கலயர், (11) திரு நீலகண்ட யாழ்ப்பாணர். எனவே, முன் குறிப்பிட்ட அடியாருள் இவர்களை நீக்கினால், அப்பர் - சம்பந்தராற் பாடப்பட்டு அவர்கட்கு முற்பட்டவர் இவராவர்.

(1) கோச் செங்கணான், (2) சண்டீசர், (3) கண்ணப்பர், (4) சாக்கியர், (5) கணம்புல்லர், (6) அமர்நீதி, (7) அரிவாள் தாயர், (8) நமிநந்தி, (9) தண்டியடிகள், (10) புகழ்த்துணையர், இப் பத்துப்பேரும் அப்பர் - சம்பந்தர்க்கு முற்பட்ட காலத்தவர் ஆவர். ஆயின், இவர்கள் பெயர்கள் பழந்தமிழ் நூல்களிற் காணப்படாமையின், கோச்செங்கணான் உட்பட இவர் அனைவரும் முற்காலப் பல்லவர் காலத்தவர் எனக் கோடலே பொருத்தமாகும்."